யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையக் கட்டிடம் (Passenger Terminal Building) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 15) மதியம் சர்வமத வழிபாடுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவத் தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கைப் விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கல்லை நாட்டினர்.
இந்தக் கட்டுமானப் பணிகளின் கட்டம் 02 (Phase 02) ஜனவரி 2026 இல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு கட்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் மொத்த முதலீடு ஏறத்தாழ 700 மில்லியன் ரூபாய்கள் ஆகும் என சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
புதிய முனையக் கட்டடம் செயல்பாட்டுக்கு வரும்போது, யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பயணிகள் சேவைகள் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.