விபத்துச் சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!

25 693bcc00eddad

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல (Asoka Ranwala), நேற்று (டிசம்பர் 11) இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் இன்று (டிசம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்துச் சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அவர் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version