விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரிக்கவில்லை: புலனாய்வு அதிகாரி அம்பலம்

rtjy 244

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரிக்கவில்லை: புலனாய்வு அதிகாரி அம்பலம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை எவரும் பிரித்தெடுக்கவில்லை, புலிகள் அமைப்பின் விசாரணை மற்றும் உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார் என இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “சுமித் என்பவரைத் தெரியுமா எனக் கருணாவிடம் கேளுங்கள். அந்த சுமித் நான்தான். கருணாவை எவரும் பிரித்தெடுக்கவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தை அவர் கொள்ளையடித்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பில் புலிகளால் கருணா வன்னிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மரண பயத்தால் அவர் செல்லவில்லை. அதையடுத்து கருணாவைக் கொலை செய்வதற்கு வன்னியில் இருந்து பொட்டு அம்மானால் குழுவொன்று அனுப்பப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட – இந்தியாவில் இருந்து தப்பி வந்த ஒரேயொரு புலி உறுப்பினர் தலைமையில்தான் அந்தக் குழு அனுப்பப்பட்டிருந்தது.

இது கருணாவுக்கும் தெரியவந்தது. இறுதியில் 20 பேரைக் கொலை செய்துவிட்டு கருணா தப்பியோடினார் என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே அவரின் புலனாய்வு சேவை இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களிலும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version