2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை, குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஏனைய மூன்று பிரதிவாதிகளையும் நீதிமன்றம் நிபந்தனையின்றி குற்றமற்றவர்கள் என விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

