24 66401df4ba882
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோர் குறித்த தகவல்

Share

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோர் குறித்த தகவல்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுச்செல்வோர் குறித்து புதிய புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவர்களின் எண்ணிக்கை 4.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றவர்களின் எண்ணிக்கை 297656 எனவும், 2022 ஆம் ஆண்டில் 311056 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச்சென்றவர்களின் எண்ணிக்கை 13400 வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களில் 55.3 வீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...