அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள வெளிநாட்டு பயணி
தனது தொலைந்து போன பயணப்பொதிகள் விரைவாக மீட்கப்பட்டதை அடுத்து இலங்கை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும், கிரிகோரியன் மரின் (Grigoryan Marin) என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகளின் ஊடகச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த அக்டோபர் 20ஆம் திகதியன்று மரின் இலங்கையை வந்தடைந்தார்.
இதன்போது, விமான நிலையத்தில் அவரது பையை காணவில்லை என்று முறையிட்டதை அடுத்து, பையை எடுத்துச் சென்ற பதுளையைச் சேர்ந்த பெண் ஒருவரை அடையாளம் கண்டு அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவரிடம் இருந்து நீதிமன்றால் 600,000 ரூபாய் இழப்பீடும் அறிவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்தே விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) விரைவான நடவடிக்கைக்கு காணொளி செய்தி ஒன்றின் மூலம் வெளிநாட்டு பயணியான மரின் நன்றி தெரிவித்;துள்ளார்.