இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்

24 6623d4c287d7d

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் மோசடி செய்யும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளிடம் அதிகளவான கட்டணங்கள் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அவ்வாறான நபர்களை அடையாளம் காண்பதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Exit mobile version