இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள இலட்சக்கணக்கானோர்!!

15 1

இந்த வருடம் இலட்சக்கணக்கான இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி சுமார் 300,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 41 நாடுகளில் இருந்து 1.2 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்பு அனுமதிகள் கிடைத்துள்ளன. திறன் மற்றும் மொழித் தேவைகளை பூர்த்தி செய்யும் நபர்களுக்கே பெரும்பான்மையான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

அதற்கமைய, திறன் மற்றும் மொழிப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தயார்படுத்துவதற்கு அமைச்சு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version