பதுளை, லிதமுல்ல பகுதியில் வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரும்பு கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. 65 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பதுளை பகுதியை சேர்ந்த 21, 24 மற்றும் 31 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.