14 1 scaled
இலங்கைசெய்திகள்

உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை

Share

உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தையில், உணவு பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக தீர்மானிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களுக்கு இல்லை.

எனவே அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள இந்த விலை அதிகரிப்பு தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”என கூறியுள்ளார்.

இதன்படி, ஒரு சாதாரண தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே, உணவு பொருட்களின் விலைகளை உயர்த்த நேரிட்டதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...