அமெரிக்கா இலங்கைக்கு வழங்கவுள்ள விமானம்

tamilnic 2

அமெரிக்கா இலங்கைக்கு வழங்கவுள்ள விமானம்

இலங்கை கடற்பகுதியினை பாதுகாப்பதற்காக விமானமொன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரியான டோலண்ட் லு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு ‘கிங் ஏர்’ விமானமொன்று வழங்கப்பட உள்ளதாக விசேட கலந்தரையாடலில் கலந்து கொண்ட அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிங் ஏர் விமானமானது, இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா ஏற்கனவே படகுகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version