25 686cbe72af15e
இலங்கைசெய்திகள்

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் சோகம்: வேன் மோதி 5 வயது சிறுவன் பலி!

Share

கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன், வேன் ஒன்றில் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன், தலகலகே நிவேன் மின்னாஸ் என்ற நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாவார்.

வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், குறுக்கு வீதியொன்றை நோக்கி ஓடிய வேளையில், அந்த வீதியில் பயணித்த வேன் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தின் போது சிறுவனுக்கு வெளிப்புறக் கீறல் காயங்கள் மட்டுமே காணப்பட்டன. எனினும், பின்னர் அவன் இரத்தம் வாந்தி எடுத்ததன் காரணமாக, அந்த வேன் சாரதியே சிறுவனை கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலைக்கு (Lady Ridgeway Hospital) அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும்போது, போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...