24 6600e32e66134
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் விசேட சுற்றிவளைப்பு

Share

தென்னிலங்கையில் விசேட சுற்றிவளைப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் ஐந்து பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மினுவாங்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெப்ரவரி 16 ஆம் திகதி மினுவாங்கொடை பொரகொடவத்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, கெசல்வத்தை, செபஸ்டியன் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் இருந்து 05 வாள்கள் மற்றும் 02 கிராம் ஐஸ் போதைப்பொருள் 680 மில்லிகிராம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 03 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலாச குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலின் பிரகாரம், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 168 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று மாலை பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயினுடன் திட்டமிட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...