மீன்பிடிக்கச் சென்று வீடு திரும்பிய இளைஞனை சிவில் உடையில் வந்த கும்பல் தாக்கிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த 5 பேர் கொண்ட கும்பல் பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.
அழைபேசி மூலம் தகவல் அறிந்த ராஜ்குமார் வீட்டுக்கு வந்தபோது குறித்த கும்பல் அவரின் கை கால்களை கட்டி அவர்கள், வந்த ஜூப்பினுள் போட்டு விக்கெட் மற்றும் கொட்டனால் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த நபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
#SriLankaNews