செம்மணி நினைவுத்தூபி சேதம்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கடற்றொழில் அமைச்சர் கடும் கண்டனம்!

image cde6dbf8c7

யாழ்ப்பாணம் செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி மீண்டும் சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்குக் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இந்தத் தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தச் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை எந்த விதமான எதிர்மறை கைகளும் பாதிக்க அரசு அனுமதிக்காது என அவர் உறுதியளித்தார்.

மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்கச் சமூக ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

Exit mobile version