இறைச்சி விலையில் அதிகரிப்பு

24 6656bbb84a081

இறைச்சி விலையில் அதிகரிப்பு

நாட்டில் இறைச்சி வகைகளுக்கான விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இறைச்சி விலைகளின் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மீன் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, ஒரு கிலோ இறைச்சியின் விலை சராசரியாக 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதனை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நாட்டின் கடல் பரப்பு தொடர்ந்தும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது.

இதனால் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் மீன் விலையும் அதிகரித்துள்ளது.

Exit mobile version