வெலிகமவில் வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீவிபத்து

7

வெலிகம – உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தீயை அணைக்க மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடுமையான தீப்பரவல் காரணமாக ஆடைத் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் மற்றும் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version