நுவரெலியா ராகலை பிரதேசத்திலுள்ள குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர் என ராகலை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்தில் சிறுவர்கள் இருவர் , இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என ஐவர் பலியாகியுள்ளனர் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தீ விபத்து தொடர்பில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த வீட்டில் உயிரிழந்த ஒருவயது சிறுவனுக்கு நேற்று முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
விசாரணையில் இத்தீப்பரவல் இடம்பெற்ற போது வீட்டிலிருந்த 35 வயது மகன் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.