tamilnaadi 100 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவைக் ஏற்படுத்திய நிறுவனத்திற்கு அபராதம்

Share

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவைக் ஏற்படுத்திய நிறுவனத்திற்கு அபராதம்

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், 15 மில்லியன் பணத்தை அபராதமாக விதித்துள்ளது.

மலேசியாவில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பயணித்த 120 மீட்டர் நீளமான கொள்கலன் கப்பலில் இருந்து இந்த எண்ணெய் கசிவு பிரான்ஸ் அரசின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, கப்பலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உரிமையாளர் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் வரை கப்பல் தடுத்து வைக்கப்பட்டு,15 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள இலங்கை, தற்செயலான கசிவுகள் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்கள் காரணமாக சுற்றுச்சூழல் அபாயத்தை எதிர்நோக்குகிறது.

இந்தநிலையில் பிரான்ஸ் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட எண்ணெய் மாசுபாட்டைக் கண்டறிதல் மற்றும் விண்வெளியில் இருந்து மாசுபடுத்துபவர்களை அடையாளம் காண்பதற்கான சேவையை, இலங்கை அரசாங்கம் அண்மையில் CLS என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

குறித்த செயற்கைக்கோள் கண்காணிப்பு சேவை மூலமே எண்ணெய் கசிவு மாசுப்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...