24 6610a83a1bd4b
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிள்ளைகளை கொலை செய்ய முயன்ற தந்தை

Share

பொலநறுவையில் (Polonnaruwa) தந்தை கத்தியால் குத்தியதில் மகள் மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிகுரகொட (Hingurakgoda), ஜயந்திபுர உதனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதான யுவதியும் 18 வயதான இளைஞனும் காயமடைந்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி இரவு 9:30 மணியளவில் ஏற்பட்ட சண்டையின் பின்னர் தந்தை தனது இரண்டு பிள்ளைகளையும் கத்தியால் குத்தியுள்ளார். மகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகளின் தங்க பென்டனை கேட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை பிள்ளைகளை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர்கள் தந்தையுடன் வீட்டில் தங்கி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...