இலங்கையில் கடும் வறுமையால் தந்தை விபரீத முடிவு

24 660cc2b2d2272

இலங்கையில் கடும் வறுமையால் தந்தை விபரீத முடிவு

திஸ்ஸமஹாராம (Tissamaharama) பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை தெரியவந்துள்ளது.

தனது 2 பிள்ளைகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் கல்வியை வழங்க முடியாத நிலையில் இந்த குடும்பத்தினர் சிக்கியுள்ளனர்.

அன்றாடம் உணவு இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனவிரக்தியில் இருந்த தந்தை விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வசிக்கும் தந்தையொருவரே இவ்வாறான செயலை செய்துள்ளார்.

Exit mobile version