10 46
இலங்கைசெய்திகள்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

Share

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புஸ்பராஜா பகீரதன் (வயது 40) அவரது மகளான பகீரதன் றியானா (வயது 03) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து, காயமடைந்த தனது மகளை விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து மீட்டு, அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது , மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தந்தையும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மூன்று வாகனங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கனேடிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...