இலங்கைசெய்திகள்

பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டில் கொள்ளை: சிக்கிய சந்தேகநபர்கள்

Share
24 6618a49354d3b
Share

பிரபல வர்த்தகரின் சொகுசு வீட்டிள்ல் கொளை: சிக்கிய சந்தேகநபர்கள்

கந்தானை – வெலிகம்பிட்டிய தேவாலய வீதியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் சொகுசு வீட்டினுள் நுழைந்து சுமார் 44 இலட்சம் ரூபா பெறுமதியான 27 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டியின் மெனிகின்ன, பன்வில மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 24, 27 மற்றும் 28 வயதுடைய மூன்று இளைஞர்கள் ஜாஎல மற்றும் கம்பஹா பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனத்தை சந்தேகநபர்களுடன் சேர்த்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனத்திற்கு 14 இலட்சம் ரூபா கைப்பணமாக (குத்தகை முறையின் கீழ்) செலுத்தி 19 இலட்சத்திற்கு வாகனம் வாங்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கமெரா காட்சிகளை அவதானித்த பின்னர், சந்தேகத்தின் பேரில் முதலில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் மேலதிக தகவல் கிடைத்துள்ளது

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கொள்ளையடித்து கிடைத்த பணத்தை செலவு செய்து அனுராதபுரம், எல்ல , நுவரெலியா ஆகிய இடங்களில் காரில் பயணம் செய்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...