6 25
இலங்கைசெய்திகள்

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

Share

காவல்துறையால் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு : போராட்டத்தில் மக்கள்

வாகன விபத்து தொடர்பில் கைதான இளம் குடும்பஸ்தர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த நிலையில் நேற்று (11) காவல்நிலையம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒரு குழந்தைக்கு தந்தையான 24 வயதுடைய ஆர்.எம். சமித டில்ஷான் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். வாதுவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வாகன விபத்து சம்பவம் தொடர்பில் வாதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் போது இரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட தனது கணவர் தன்னை காவல்துறையினர் தடியால் கடுமையாக தாக்கியதாகவும், நெஞ்சு வலிக்கிறது என்றும் கூறியதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி ரோஷினி லக்மாலி பாணந்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இரத்த வாந்தி எடுத்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் அவர் இறந்துவிட்டதாக ஊடகங்களிடம் மனைவி கூறினார்.

இதேவேளை காவல்துறையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக தெரிவித்து, காவல் நிலையத்தின் முன்பும் அதைச் சுற்றியும் சுமார் 40 பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தையடுத்து வாதுவ காவல்துறையினரின் பிரதான நுழைவாயில் வீதித் தடைகளினால் முற்றாக அடைக்கப்பட்டிருந்ததுடன் கிட்டத்தட்ட 20 அதிகாரிகள் கொண்ட குழு பிரதான வீதியை மறித்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...