இலங்கையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்

24 6649890f2d677

இலங்கையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்

குருணாகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல், மீரிகம, மாலதெனிய வீடொன்றுக்குள் புகுந்த 42 வயதான திருடனால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சுமார் 80 வயது வயோதிபர், 77 வயது அவரது மனைவி மற்றும் 42 வயது மகன் மூவரும் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்டுள்ளனர்.

வீட்டுக்குள் புகுந்த நபர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி என சந்தேகிக்கப்படும் திருடன் பெரும் தொகை பணம் மற்றும் நகைகளுடன் பதற்றத்துடன் வீதியால் நடந்து சென்றுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொலிஸார் திருடனை கைது செய்துள்ளார். வீட்டினுள் இளம் வயதினர் பெரிதாக இல்லை என்பதை அறிந்த திருடன் அதிகாலை 3 மணியளவில் வீட்டினுள் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version