ஐரோப்பா செல்ல முயன்ற நால்வர் கட்டுநாயக்கவில் கைது

tamilni 532

ஐரோப்பா செல்ல முயன்ற நால்வர் கட்டுநாயக்கவில் கைது

போலியான கிரேக்க வீசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல வந்த வர்த்தக குடும்பம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபாவை தரகர் ஒருவரிடம் செலுத்தி அதற்குரிய போலியான கிரேக்க விசாக்களை தயார் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் குடும்பமே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் 43 வயதுடைய தந்தை, 47 வயதுடைய தாயார் மற்றும் 21 மற்றும் 16 வயதுடைய 2 மகன்கள் ஆகியோர் என தெரியவந்துள்ளது.

Exit mobile version