குருணாகலில் பெண்களை அச்சுறுத்தி குடும்பமாக கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..
மஹாவ பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
தாய், தந்தை, மகன் ஆகியோர் இந்த இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாரியபொல, பாதெனிய பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது தப்பியோடிய தந்தை தலதாகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கர்ப்பிணி பெண் 33 வயதானவர் எனவும், 22 வயது முறையற்ற கணவன் மற்றும் 15 வயது மகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.