கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

25 68fa2cc1432fd

முன்மொழியப்பட்ட தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வரைவு எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி ஆவணம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

2026 கல்வி சீர்திருத்த முன்மொழிவாக பகிரப்பட்டு வரும் வரைவு ஆவணம், அமைச்சகத்தினாலோ அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தினாலோ வெளியிடப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, போலி ஆவணத்தைத் தயாரித்து பரப்புவதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version