25 69133f673e45f
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் செவ்வந்தி பாணியில் மோசடி: போலி சட்டத்தரணி விளக்கமறியல் நீடிப்பு!

Share

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு, பொதுமக்கள் பலரிடம் இலட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போலிச் சட்டத்தரணியை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 8) உத்தரவிட்டார்.

குறித்த போலிச் சட்டத்தரணி கடந்த நவம்பர் 8ஆம் திகதி ஒந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீடு ஒன்றில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். பொதுமக்களிடம் வழக்காடித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

அத்துடன், சில சட்டத்தரணிகளையும் அவர் ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் இன்று சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், அவரை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...