24 6642c3f465e11
இலங்கைசெய்திகள்

காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல்

Share

காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல்

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்த பலரின் ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பேஸ்புக் சமூக ஊடகங்கள் ஊடாக இணைந்துள்ளனர்.

அவர்கள் இணைந்து இந்தக் கூடாரங்களை அமைப்பதற்கு அனுமதியின்றி நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குழுவினர் நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்து நெருப்பு கொளுத்தி விருந்தில் ஈடுபட்டதாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்பு துறையுடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...