tamilnaadi 29 scaled
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறை மூலம் 6 பில்லியன் டொலர் வருமானம் : டயனா கமகே

Share

சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த சுற்றுலாத்துறை இன்று ஓரளவு ஸ்திரமான நிலைக்கு வந்துள்ளது. 2023 டிசெம்பர் இறுதியில் 106 % சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இன்னும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கவும் அவசியமான பணிகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.

2023 ஆம் ஆண்டில் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைப்பதே எமது இலக்காக இருந்தது. நாம் அந்த இலக்கை ஓரளவுக்கு அடைந்துகொண்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண்டும்.

இவ்வருடம் எமது இலக்கு குறைந்தது இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு அழைத்து வருவதாகும். அதன் ஊடாக 06 பில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக, சுற்றுலாத் தளங்களின் பிரவேசப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் அதிகரித்திருக்கின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.

வற் வரி எவ்வளவு தூரம் எமது சுற்றுலாத் துறையில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பது குறித்தும் சுற்றுலாத் துறைக்கு இந்த வற் வரி தொடர்பில் நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் சுற்றுலாத் துறை அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடுகின்றார். அந்தப் பணிகள் வெற்றியடையும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் அவற்றை இவ்வருட இறுதியில் நிறைவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம்.

உதாரணமாக எல்ல, பண்டாரவளை, நீர்வீழ்ச்சிகள் மற்றும் இராவணன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதை போன்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளோம். அதேபொன்று தென்பகுதி உட்பட நாட்டில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்நாட்டுக்கு டொலர் கொண்டு வரும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எதிர்காலத்திலும் அவ்வாறே அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

எமது பணிகள் வெற்றியடையும் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...