ஜனாதிபதி ரணில் நாடு திரும்பியதும் எடுக்கப்படவுள்ள இறுதித் தீர்மானம்

tamilnaadiD

கலால் வரி அனுமதிப்பத்திர கட்டணத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

புதிய கலால் வரி அனுமதிப்பத்திர கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில், மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அது தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கலால் வரி அனுமதிப்பத்திர கட்டண அதிகரிப்பை மேற்கொண்டார்.

இது தொடர்பான அதி விஷேட வர்த்தமானியையும் அவர் வெளியிட்டிருந்தார்.

Exit mobile version