காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
அதிக சூரிய ஒளியில் வெளிப்படுவதனால் குருட்டுத்தன்மை ஏற்படலாம் என கண் சத்திரசிகிச்சை நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.
அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர் அருந்துவதும், புற ஊதா கதிர்கள் கண்களுக்குள் படாமல் இருக்க கண்ணாடி மற்றும் தொப்பி ஆகியவை பயன்படுத்துவதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கணிசமான நேரத்தை வெளியில் செலவிடுபவர்கள் மற்றும் சூரிய ஒளியில் ( புற ஊதா கதிர்கள் (UV) கதிர்கள்) வெளிப்படும் நபர்களுக்கு கண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் வெளியில் தங்கள் வேலையில் ஈடுபடும் நபர்கள் வெயில்காப்புக் கண்ணாடி. அணியுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.