24 66063f185932e
இலங்கைசெய்திகள்

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி: வலுவடையும் இலங்கை ரூபா

Share

300 ரூபாவாக குறைந்துள்ள டொலர் பெறுமதி: வலுவடையும் இலங்கை ரூபா

டொலரின் பெறுமதி சுமார் 300 ரூபாவாக குறைந்துள்ள நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைவது எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் 70 – 75 ரூபா வரை விலை உயர வேண்டிய ஒரு முட்டையின் விலையானது அரசாங்கம் முட்டைகளை இறக்குமதி செய்வதால் 40 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தலையிட்டு விலையை கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேவேளை சந்தையில் முட்டையின் விலை 40 ரூபாவிற்கு குறைவாக இருந்தால் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உள்ளூர் மற்றும் இறக்குமதி பொருட்களான மரக்கறிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியதையடுத்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நடுத்தர அளவிலான இளஞ்சிவப்பு வெங்காயத்தின் இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...