இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு

JAPPAN

ஜப்பானில் உள்ள விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பானிய அரசு உடன்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கு தேர்வு செய்யப்படும் இளையோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தேவையான மொழிப்பயிற்சி மற்றும் பிற பயிற்சிகளையும் பூர்த்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version