ஊழியர் சேமலாப நிதிய தீர்மானம் தொடர்பில் அனுரகுமார கடும் கண்டனம்
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த தினத்தன்று, நாடாளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை எந்த நீதிமன்றத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாது அதிகாரமில்லை என சபாநாயகர் விடுத்த அறிவிப்பு முற்றிலும் தவறானதுடன் அரசியலமைப்பு மீறலாகும்.
கடன் மறுசீரமைப்பு யோசனையை தவிர சட்டமூலமல்ல, அரசாங்கத்தின் யோசனைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என்றால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும்.
ஆகவே தவறான அறிவிப்பை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
சபாநாயகரின் அறிவிப்புக்களை சவாலுக்குட்படுத்த கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் காணப்படுகிறது. இருப்பினும் சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்றத்தினதும், நாட்டின் ஏனைய செயற்பாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
1 Comment