12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!
இலங்கைசெய்திகள்

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!

Share

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..!

இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில் புரியும் இடங்களில் சேவையாற்றுவதற்காக தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமை, தேவையான நேரத்தில் அவர்களை வெளியேற்ற இருக்கும் உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை உருவாக்கும் நிலைமையே இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்புரியும் தொழிற்சாலைகளின் பிரதானிகளினால், தொழிலாளர்களுடன் தனியான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள கூடியவாறான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் கட்டாயம் கையொப்பமிடவேண்டி ஏற்படும்.

அதில் கையொப்பமிட்டதன் பின்னர் சாதாரண தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருக்காது. எனவே, அதனூடாக தொழிலாளர்களை அவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் தொழிற்சாலையிலிருந்து நீக்குவதற்கும் அவர்களுக்கு ஏற்றவாறு தொழில்புரியும் காலத்தை தீர்மானிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு போராட்டங்களின் பின்னரே தற்போது நடைமுறையில் இருக்கும் 8 மணிநேர பணியை பெற்றுக் கொண்டோம். அவ்வாறு இருக்கையில், தேவை ஏற்படும் பட்சத்தில் 12 மணிநேரம் சேவையாற்றுவதற்கான உரிமையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன. இந்த யோசனைகளினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...