கண்டி பெரஹராவில் குழப்பத்தில் ஈடுபட்ட யானைகள்!

tamilni 299

கண்டி பெரஹராவில் குழப்பத்தில் ஈடுபட்ட யானைகள்!

கண்டியில் நடைபெற்ற எசல பெரஹராவில் இரண்டு யானைகள் திடீரென மதம்பிடித்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது எசல பெரஹராவினை பார்வையிட வந்த மக்கள் பதற்றத்தில் ஓடியதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ​​பொலிஸார், உயிர்காக்கும் குழுவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version