3 31
இலங்கைசெய்திகள்

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு

Share

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இன்று (17) வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் (Jayanath Herath) தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதுடன் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0 முதல் 30க்கு இடைப்பட்ட அலகு மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 29 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 31 முதல் 60 வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 28 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 91 முதல் 180 அலகு வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 வீத கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 19 வீத கட்டணக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுத்துறைக்கு 11வீதம், ஹோட்டல் துறைக்கு 31 வீதம் மற்றும் தொழில்துறை துறைக்கு 30 வீத கட்டணக் குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 21வீத மின்சாரக் குறைப்பும் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அத்துடன், தெரு விளக்குகளுக்கு 11 வீத கட்டணக் குறைப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...