மின் கட்டண குறைப்பு தொடர்பில் நடவடிக்கை

tamilni 347

மின் கட்டண குறைப்பு தொடர்பில் நடவடிக்கை

எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயலிழக்க செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக அதன் முகவர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version