தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டண அதிகரிப்பு

tamilnaadi 135

தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டண அதிகரிப்பு

தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருக்கிறது.

தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை மின்சார சபை உயர்த்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version