மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் தகவல்
எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உமா ஓயா மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 120 மெகாவோட் கூடுதல் மின்சாரம் தேசிய அமைப்புக்கு கிடைத்துள்ளது.
இதன் ஊடாக கிடைத்த நேரடி மின்சாரத்தின் பலன்களை மக்களுக்கு வழங்க முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Comments are closed.