2f 6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

Share

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல் ஆணையாளா் தொிவித்தாா்.

இதன் காரணமாக வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் | Election Total Voting Results As Of This Evening

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது.

அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கிடல் எப்படி நடக்கும்?
2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

அதன் காரணமாக தற்போதைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் 50% ஐ எட்டாதபோது, ​​முதல் 2 வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு, நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் 2வது முன்னுரிமை எண்ணப்பட்டு, இரண்டு முன்னணி வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும்.

2வது விருப்பத்தேர்வுகள் நீக்கப்பட்ட மற்றொரு வேட்பாளருக்குக் குறிக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு, முதல் இரண்டில் ஒருவருக்குப் போட்டால் அவை சேர்க்கப்படும்.

இறுதி வெற்றியாளர் இருவரில் அதிக எண்ணிக்கையைப் பெற்ற வேட்பாளர் ஆவார். பத்து சதவீத இடைவெளியைக் கருத்தில் கொண்டு, விருப்பத்தேர்வு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இறுதி அறிவிப்புக்கு முன் இதற்கான செயல்முறை முடிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில், நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...