இலங்கைசெய்திகள்

கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள்

Share
13 3
Share

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு (Colombo) அழைப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை (08) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாளை (06) நடைபெறும் தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் தேர்தல் தொடர்பான திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப் பதிவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் தபால் மூல வாக்குப் பதிவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...