27ஆம் திகதி நள்ளிரவு வரை காலக்கெடு! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

10 30

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கமைய தமது தேர்தல் பிரச்சார செலவின் விபரங்களை வேறுவேறாக தயாரித்து 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர் உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட https://cf.slestions.gov.lk/ இணைய இடையிணைப்பியிலும் பிரவேசித்து பதிவு செய்து கொண்ட பின்னர் அந்த இணையதளத்திற்கு தமது தேர்தல் விபரத்திரட்டுக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய வகையில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் இக்காலத்துள் அவற்றை ஒப்படைக்க முடியாதிருப்பின், 27ஆம் திகதிக்கு முன் வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் போட்டியிட்ட உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பிவைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேரதல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் ஆம் பிரிவிற்கமைய 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் விபரத்திரட்டுக்களை ஒப்படைக்காதிருப்பதன் ஊடாக சட்டவிரோதமான செயலொன்றைப் புரிந்தவராகக் கருதி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

Exit mobile version