இலங்கையில் நாளை(6) உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்கள் செல்லுகின்ற போது தம்முடன் எடுத்துச் செல்வதற்கு வாக்காளர் அட்டை ஒரு அத்தியாவசியமான ஆவணமாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், வாக்காளர் அட்டைக் கிடைக்கப்படாதவர்கள் இங்கே வழங்கப்பட்டுள்ள http://ec.lk/vre இந்த லிங்கை அழுத்துவதன் மூலம் நேரடியாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக் குழுவின் இணையத்தளத்தின் e-serviceக்குச் செல்லலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கே அடையாள இலக்கத்தை உட்படுத்தி மாவட்டத்தை தெரிவு செய்து உங்களுக்ககுரிய உள்ளூராட்சி மன்றம் எது, எங்கே வாக்களிக்க வேண்டும், போன்ற விபரங்களுடன் கூடிய வாக்காளர் அட்டையை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தரவிறக்கம் செய்த ஆவணத்தை அச்சுப்படுத்தி அதனை வாக்களிக்க எடுத்து செல்ல முடியும்.
எனவே வாக்காளர்கள் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் இந்த லிங்கை பயன்படத்த முடியும் என தேர்தல்கன் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.