தொண்டமானாறு கடல்நீரேரியில் வயோதிபர் சடலம் மீட்பு

தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரிழில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரின் சடலமே இவ்வாறு நீரேரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை மீன்பிடிக்கச் சென்றவர்கள் அங்கு சடலமொன்று மிதப்பதை கண்டு அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் கடல் நீரேரியில் இருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

கோயிலுக்கு வந்த குறித்த வயோதிபர் குளிக்க முற்பட்டபோது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

thoda

Exit mobile version