இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி: மக்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

24 667b6a3d41a43 33

இலங்கையில் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யும் முட்டை வியாபாரி: மக்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

இலங்கையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை மூலம் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் உலங்குவானூர்தி கொள்வனவு செய்யுமளவுக்கு பணக்காரராக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு முட்டை உற்பத்தி செலவு 31 ரூபாய் என்றாலும், 50-55 ரூபாய்க்கு இடையேயான விலையில் நுகர்வோரை சென்றடைகிறது.

அதற்கமைய, முட்டை வியாபாரிகள் வரம்பற்ற இலாபம் ஈட்டுகின்றனர். மேலும், முட்டை வியாபாரிகள் பெரும்பாலானோர் உற்பத்தி செய்த முட்டைகளை தனியார் இடங்களில் இருப்பு வைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சந்தையில் போலியான முட்டை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு முட்டை விலையை உயர்த்துவதாகவும் அரச கால்நடை துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்தநிலையில், நுகர்வோரை சுரண்டி அதிக இலாபம் ஈட்டும் முட்டை வியாபாரிகள், தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக உலங்குவானூர்தியை கொள்வனவு செய்வது தொடர்பில், விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Exit mobile version