இலங்கையில் பாடசாலைகள் தொடர்பில் நடவடிக்கை
அடுத்த மாதம் முதல் கல்வி பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கைமறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கல்வி நிர்வாகத்தின் ஊடாக மறுசீரமைப்பிற்கான குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்படி எதிர்காலத்தில், 1 – 5 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் தொடக்கப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும்.
அத்துடன் 6 – 10 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும், 10 – 13 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மூத்த மேல்நிலைப் பாடசாலைகளாகவும் வகைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.