சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் மேம்பாடு: சீருடை கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

1624450407 online edu 02

‘தித்வா’ சூறாவளியின் பாதிப்புக்குள்ளான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், அவர்களுக்கு உதவும் நோக்கில் அமைச்சின் டிஜிட்டல் கற்றல் தளம் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காகக் கல்வியமைச்சின் டிஜிட்டல் கற்றல் தளம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எந்தவொரு இடத்திலிருந்தும் பாடவிதானங்கள் மற்றும் கடந்தகால வினாப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய இலத்திரனியல் கற்றல் தளமான ஈ-கல்விக்கூடத்திலான (E-thaksalawa) அணுகலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறையினூடாக வெளிவாரியான நெருக்கடிகளின்றி மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்குச் செல்லும் போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Exit mobile version